செய்திகள் :

"நான் அணிக்கு தகுதியாக இருந்தால் தேர்வு செய்யுங்கள், இல்லையென்றால்"- ஆசியக்கோப்பை குறித்து ஷமி

post image

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி
ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி

இதில் ஸ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஆசியக் கோப்பையில் இடம்பெறாதது குறித்து நியூஸ் 24 என்ற ஊடகத்திற்கு முகமது ஷமி பேட்டி அளித்திருக்கிறார்.

அதில், " ஆசியக்கோப்பை தொடரில் என்னை தேர்வு செய்யவில்லை என்று நான் யாரையும் குறைக்கூற மாட்டேன்.

நான் இந்திய அணிக்கு தகுதியாக இருந்தால் தேர்வு செய்யுங்கள். இல்லையென்றாலும் அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

இந்திய அணிக்காக சிறந்தவற்றை செய்வது தேர்வாளர்களின் பொறுப்பு. எனக்கு என் திறமைகளின் மீது நம்பிக்கை இருக்கிறது.

முகமது ஷமி
முகமது ஷமி

வாய்ப்பு கொடுத்தால் திறமையை நிரூபிப்பேன். சர்வதேச போட்டிகளில் என்னை எடுத்துக்கொள்ளவில்லையெனில், நான் உள்நாட்டு போட்டிகளில் ஆடுவேன்" என்று கூறியிருக்கிறார்.

ஓய்வுப் பற்றிய கேள்விக்கு, " ஓய்வைப் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. அந்த நிலைமை எனக்கு இன்னும் வரவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

முதலும் முடிவும் சிஎஸ்கே... IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின்! - ஆனால் ஒரு ட்விஸ்ட்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த ச... மேலும் பார்க்க

தோனி டு கோலி... ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் சுமார் ரூ.200 கோடி வரை இழக்கும் இந்திய வீரர்கள்!

தற்போது நடந்து முடிந்த மழைக்கால நாடளுமன்ற கூட்டத் தொடரில், ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-ஐ (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) எனும் ஆன்லைன் சூதாட்ட தடை... மேலும் பார்க்க

2011 CWC Final: "யுவி-க்கு முன்னாடி தோனி இறங்கியதற்கு 2 காரணங்கள் இருக்கிறது" - சச்சின் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு தனி இடம் உண்டு.ஏனெனில், 1983-ல் இந்திய அணி கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற பிறகு 6 உலகக் கோப்பைத் தொடர்களில் ஒருமுறைக்கூட கோப... மேலும் பார்க்க

Pujara: ஓய்வு பெற்றாலும் Unbeatable... `மாடர்ன் டே டிராவிட்' புஜாராவின் டாப் 3 சாதனைகள்!

கிரிக்கெட் உலகில் ஆக்ரோஷ அணுகுமுறைக்கு சொந்தக்காரர்களான ஆஸ்திரேலிய வீரர்கள், கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் ஒருவர் இல்லாததைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்றால், அத்தகைய சிறப்புக... மேலும் பார்க்க

"தோனிக்கு என்னைப் பிடிக்காது" - சர்வதேச கரியர் தோல்வி குறித்து மனம் திறக்கும் மனோஜ் திவாரி

மேற்கு வங்கத்திலிருந்து வந்த இந்தியாவின் சிறந்த உள்ளூர் போட்டி வீரர்களில் ஒருவர் மனோஜ் திவாரி.உள்ளூர் போட்டிகளைப் பொறுத்தமட்டில் முதல் தர கிரிக்கெட்டில் 47.8 ஆவரேஜில் 10,000-க்கும் மேற்பட்ட ரன்களும், ... மேலும் பார்க்க

IND vs PAK: "இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும்" - வாசிம் அக்ரம் விருப்பம்

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் காரணமாக இரு அணிகளும் கடந்த 13 ஆண்டுகளாக இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடாமல் இருக்கின்றன.டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் கடைசியாக 2007-ல் 3 போட்... மேலும் பார்க்க