`அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' ...
ஜம்முவில் ஆக. 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக ஆக.30 வரை ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்,
ஜம்முவில் பல பகுதிகளில் அதி கனமழை தொடர்வதால் மாணவர்களின் நலன் கருதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 30 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ செனல்களின் மூலம் அவ்வப்போது தகவல்களை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.