இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!
ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!
ஹரியாணாவில் தகுதியான பெண்களுக்கு செப். 25 முதல் மாதந்தோறும் ரூ. 2100 உதவித்தொகை வழங்கப்படும் திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்தார்.
மாநிலத்தில் ஆளும் பாஜக தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது. செப். 25 முதல் லடோ லட்சுமி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்தார்.
தீன் தயாள் லடோ லட்சுமி யோஜனா திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான செப்டம்பர் 25 முதல் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பெண்களும் மாதந்தோறும் ரூ.2,100 நிதி உதவி பெறுவார்கள். செப்டம்பர் 25 முதல் 23 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைவார்கள்.
திருமணமானவர்கள், திருமணமாகாதவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். முதல்கட்டமாக ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம். வரும்காலங்களில் இந்த திட்டத்தில் வருமானப் பிரிவுகளைச் சேர்த்து விரிவுபடுத்தப்படும்.
மேலும் திருமணமாகாத பெண் அல்லது திருமணமானவராக இருந்தால் அவரது கணவர் 15 ஆண்டுகள் ஹரியாணாவில் வசிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், மூவரும் இந்தத் திட்டத்தின் பயனைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.