செய்திகள் :

ஆசிய கோப்பை: ஒரு வாரத்துக்கு முன்பாகவே துபை செல்லும் இந்திய அணி!

post image

இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக செப்.4ஆம் தேதியே துபைக்குச் செல்லவிருப்பதாக பிசிசிஐ-இன் மூத்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

துபையில் வருகிற செப்.9ஆம் தேதி ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன.

சூர்யகுமார் தலைமையில் 15 பேர்கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது.

துபை செல்வதற்கு முன்பாக அனைத்து வீரர்களும் மும்பையில் ஒன்றுகூடுவதாகக் கூறப்பட்டுள்ளது. பயணத்தை எளிமையாக்க இப்படி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் போட்டி செப்.10ஆம் தேதி யுஏஇ உடனும் செப்.14-இல் பாகிஸ்தானுடம் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

செப்.4இல் துபைக்கு வரும் வீரர்கள் செப்.5-இல் வலைப் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி விவரம்

சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் சிங் ராணா, ரிங்கு சிங்.

ஆசிய கோப்பை 2023-இல் இந்திய அணி இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில்தான் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

The 15-member Indian squad led by Suryakumar Yadav will assemble in Dubai on September 4 for the Asia Cup, which begins on September 9.

அசத்தும் சாம் கரண்! சிஎஸ்கே வாழ்த்து!

இங்கிலாந்தில் விளையாடிவரும் சாம் கரண் சிறப்பாக விளையாடுவதால் சிஎஸ்கே அணி வாழ்த்தியுள்ளது. இதற்காக சாம் கரணுக்குச் சிறப்புப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் சாம் கரண் (2... மேலும் பார்க்க

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

விரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக் தில்லி பிரீமியர் லீக்கில் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிரடியாக 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விரேந்திர சேவாக்கின் மூத்த மகன் ஆர்யவிர்... மேலும் பார்க்க

கர்நாடகத்தின் பெருமையாக இருப்போம்..! 3 மாதங்களுக்குப் பிறகு ஆர்சிபி பதிவு!

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஆர்சிபி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் முதல்முறையாக பதிவிட்டுள்ளது. அதில் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் கர்நாடகத்தின் பெருமையாக இருப்போம் என்று அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!

ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களின் தரவரிசைப் பட்டியலில் கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேறியுள்ளார். இந்தியாவின் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா முதலிரண்டு இடங்களில் நீடிக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டு தடை: இந்திய வீரர்களுக்கு ரூ. 200 கோடி இழப்பு! தோனி, கோலி, ரோஹித்துக்கு அதிக பாதிப்பு!

பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர்.பணம் செலுத்தி விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை ... மேலும் பார்க்க

புற்றுநோய்: 6-ஆவது அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!

ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனக்கு ஆறாவது முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் விழிப்புணர்வு வேண்டியே பதிவி... மேலும் பார்க்க