தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!
தருமபுரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சின்னசாமி வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
தருமபுரி மாவட்ட திமுக முன்னோடியான ஆர். சின்னசாமி 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்களில், திமுக உறுப்பினராகத் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தின் செயலாளராக 15 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஆர். சின்னசாமி வியாழக்கிழமை காலமானார்.
அவரது மறைவு தருமபுரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள், மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.