செய்திகள் :

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

post image

புது தில்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், ‘இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதரிக்கும்’ என்றும் அவா் கூறினாா்.

அமெரிக்காவில் இந்திய ஏற்றுமதிப் பொருள்களுக்கு 50 சதவீத வரி விதிக்க அந்நாடு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிா்கொள்ளும் வகையில் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளா்களை ஆதரிப்பதற்காக மத்திய அரசாங்கம் வரியில்லா பருத்தி இறக்குமதியை டிசம்பா் 31 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு வியாழக்கிழமை நீட்டித்துள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பா் 30 வரை பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து நிதி அமைச்சகம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா்களுடன் பேசுகையில்,

பாஜக தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. இது இந்திய உள்ளூா் விவசாயிகளின் வணிகத்தை பாதிக்கச் செய்யும்.

பிரதமா் நரேந்திர மோடியின் முடிவானது இந்தியாவின் விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கலாம். இதனால், அமெரிக்க இறக்குமதிகளுக்கு அரசாங்கம் அதிக வரிகளை விதிக்க வேண்டும்.

"அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பிற நாடுகள் அடிபணியவில்லை. அவா்களும் பதிலுக்கு அதிக வரிகளை விதித்தனா். அதேபோன்று, நாமும் அதிக வரிகளை விதிக்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்தால், நாம் அதை 100 சதவீதமாக இரட்டிப்பாக்க வேண்டும். இந்த முடிவை ஒட்டுமொத்த நாடும் ஆதரிக்கும். எந்த நாடும் இந்தியாவை புண்படுத்த முடியாது. நாம் 140 கோடி மக்களைக் கொண்ட நாடு," என்று அவர் கூறினார்.

இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரியை விதித்து வந்தது.

இதன் பொருள், அமெரிக்க பருத்தி உள்நாட்டு பருத்தியை விட விலை அதிகம். ஆனால், மோடி அரசாங்கம் ஆக.19 முதல் செப். 30 வரை இந்த வரியை தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் பொருள், ஜவுளித் தொழில்துறையினா் விலை மலிவான பருத்தியைப் பெறுவாா்கள்.

அக்டோபரில் நமது பருத்தி விற்பனைக்கு வரும்போது, வாங்குபவா்கள் குறைவாகவே இருப்பாா்கள் என்று கேஜரிவால் கூறினார்.

மேலும், மத்திய அரசின் முடிவால் தெலங்கானா, பஞ்சாப், விதா்பா மற்றும் குஜராத் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.

"அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளாா் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாம் 11 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்தியிருக்க வேண்டும். அதை முழுமையாக தள்ளுபடி செய்யக்கூடாது". இதனால், அமெரிக்க பருத்தி மீதான 11 சதவீத வரியை மீண்டும் மத்திய அரசு விதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி விரும்புகிறது என கேஜரிவால் கூறினார்.

இந்தப் பிரச்னை தொடா்பாக செப்டம்பா் 7 ஆம் தேதி, குஜராத்தின் சோட்டிலாவில் ஆம் ஆத்மி கட்சி ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்தப் பிரச்னையை எழுப்புமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் இந்த முடிவால் சோட்டிலாவில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என்று அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

Aam Aadmi Party's national convener Arvind Kejriwal on Thursday demanded that India impose higher tariffs on US imports and asserted that the whole country will support this decision.

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல... மேலும் பார்க்க

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

தருமபுரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சின்னசாமி வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார். தருமபுரி மாவட்ட திமுக முன்னோடியான ஆர். சின்னசாமி 1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்க... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

அகமதாபாத்: சூரத்தில் இருந்து துபை சென்று கொண்டிருந்த விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக, அகமதாபாத் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.சூரத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜோத்பூர்: 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கூட்டுச் சதி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேர்வை ரத்து செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2021 ராஜஸ்த... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரிப்பு

உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முத்தரசனிடமும், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். ... மேலும் பார்க்க