செய்திகள் :

"புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி; யார் முடிவெடுப்பது..!" - RSS தலைவர் மோகன் பகவத் சொன்ன பதில்

post image

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.

இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார். அதில், 'பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா?' என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆர்எஸ்எஸ் என்பது சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு. இதற்கு துணை அமைப்புகள் கிடையாது. மத்திய, மாநில அரசுகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நேர்மையாக உழைக்கின்றனர். பாஜகவுக்காக ஆர்எஸ்எஸ் முடிவு எடுக்கிறது என்பதில் உண்மையில்லை.

மோகன் பகவத்
மோகன் பகவத்

``உலக வர்த்தகம் தானாக நடைபெற வேண்டும்; அழுத்தத்தின் கீழல்ல'' - RSS தலைவர் மோகன் பகவத்

அனைத்து முடிவுகளும் கூட்டாக எடுக்கப்படுகிறது. அமைப்பை நிர்வகிப்பதில் எனக்கு திறமை உண்டு. அரசை நடத்துவதில் பாஜகவுக்கு திறமை உண்டு. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆலோசனைகளை பரிமாறி கொள்கிறோம். ஆனால், எங்களது துறைகளில் முடிவுகளை சுதந்திரமாக எடுக்கிறோம்.

நாங்கள் ஆலோசித்து ஒரு மித்த முடிவு எடுக்கிறோம். நிர்வாகத்தில் உள்முரண்பாடுகள் கொண்ட அமைப்புகள் உள்ளன. ஆனால், எந்த வகையிலும், எந்த மோதலும் இல்லை . புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி எங்களுடையதாக இருந்தால், இவ்வளவு காலதாமதம் ஆகியிருக்காது." என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

UK: நாடு முழுவதும் பாகிஸ்தான் பாலியல் வன்கொடுமை கும்பல் அட்டூழியம் - சுயேச்சை எம்.பி குற்றச்சாட்டு!

ஐக்கிய ராச்சியத்தில் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தும் கும்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 85 அதிக... மேலும் பார்க்க

`அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை' - மாணிக்கம் தாகூர்

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1,01,800 மதிப்புள்ள மூன்று வாகனங்கள் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,14,400 மதிப்பில் வழங்கினார். பின்னர் செய்தியாளர... மேலும் பார்க்க

ராகுல் காந்தி: `குஜராத் கட்சிகள் பெற்ற ரூ.4300 கோடி நன்கொடை என்ன ஆனது'- தேர்தல் ஆணையம் விசாரிக்குமா?

குஜராத் மாநிலத்தில் உள்ள 10 சிறிய முகம் தெரியாத கட்சிகள் 2019-20 மற்றும் 2023-24 கால கட்டத்தில் ரூ.4300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான ஊடக அறிக்கைகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கா... மேலும் பார்க்க

'இந்தியா நினைத்தால் நாளைக்கே 25% வரியில் இருந்து தப்பிக்க முடியும்' - ட்ரம்பின் ஆலோசகர் பேச்சு

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துவிட்டது. இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ... மேலும் பார்க்க

`விஜய் வருகை பல அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை' - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயல... மேலும் பார்க்க

கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு கொடுப்பது யார்?

மனம் வெதும்பும் மீசைத் தலைவர்!“கூட்டணியில் இருந்து என்ன பயன்?”தமிழகத்தையே உலுக்கிய ஆணவப் படுகொலைக்குப் பிறகு, முதன்மையானவரைச் சந்தித்த மீசைத் தலைவர், ‘ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை’ உடனடியாக நிறைவே... மேலும் பார்க்க