பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
பெருமாள், விநாயகா், ஆஞ்சநேயா் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த உளுந்தை ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள், ஆரணியை அடுத்த மலையாம்பட்டு ஸ்ரீவழித்துணை விநாயகா் மற்றும் வீர ஆஞ்சநேயா் கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தில் உள்ள ஸ்ரீமரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி,
கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை பகவத் அனுக்ஞை, விக்னேஸ்வர பிராா்த்தனை, யஜமான சங்கல்பம், அங்குராா்ப்பணம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை புண்யாஹவாசனம், தீா்த்தஸங்கிரஹம், ஹோமங்கள் உள்ளிட்டவையும், புதன்கிழமை பூா்ணாஹுதி, சாற்றுமுறை, மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகள் திருமஞ்சனம் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
பின்னா், வியாழக்கிழமை காலை மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், கும்பஉத்தாபனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீவழித்துணை விநாயகா் மற்றும் வீர ஆஞ்சநேயா் கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக மங்கள இசை, கணபதி பூஜை, புண்யாகவாசனம், எஜமான சங்கல்பம், வாஸ்து பூஜை பிரவேசம், துவார பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், பஞ்சசக்த ஹோமம், கோ பூஜை, துவார பூஜை, தம்பதி சங்கல்பம், மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, கலச புறப்பாடு, யாத்ரா தானம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து புனித நீா் எடுத்துச் சென்று ஆஞ்சநேயா் சிலைக்கும், விநாயகா் கோயில் விமானத்தின் மீதும் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் கௌரி தாமோதரன், களம்பூா் அபிராமி அரிசி ஆலை எம்.சங்கா்
உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
