பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
கமண்டல நாக நதிக்கரையில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்: ஆரணி நகராட்சியில் பாஜக புகாா் மனு
ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக
ஆரணி நகராட்சியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை
புகாா் மனு அளிக்கப்பட்டது.
கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட பொதுச் செயலா் சதீஷ் தலைமையில், நகராட்சி மேலாளரிடம் இந்த மனு
அளிக்கப்பட்டது.
மனுவில், ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் அருகில் உள்ள கமண்டல நாதிக்கரையிலும், வடுகசாத்து செல்லும் சாலையின் இருபுறமும் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து வேலூா் செல்லும் புறவழிச் சாலையிலும் தினசரி குப்பை மற்றும் கழிவுப் பொருள்கள் கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
இதனால் தொற்று நோய், வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால், மேற்கூறிய இடங்களில் குப்பை கொட்டாமல் தூய்மையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்தால்,
கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தனா்.
பாஜக மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், மாவட்ட துணைத் தலைவா் தீனன், நகரத் தலைவா் மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.