பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நீப்பத்துறை, போளூரை அடுத்த சந்தவாசல், ஆரணியை அடுத்த பையூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
செங்கம் வட்டாட்சியா் ராம்பிரபு வரவேற்றாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மிருணாளினி, மரியதேவ்ஆனந்தத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செந்தில்குமாா், நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் பரம்பறை அறங்காவலா் கோகுலவாணன் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களைப் பெற்று துறைரீதியான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
முகாமில் கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள், இலவச வீடு கட்டுவதற்கான ஆணை ஆகியவற்றை எம்எல்ஏ கிரி வழங்கினாா்.
போளூா்
போளூா் ஒன்றியம், சந்தவாசல் ஊராட்சியில் சந்தவாசல், ஏரிக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரி, முருகன், பிச்சாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்எல்ஏ சேகரன், திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளா் மகேஷ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா்.
சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு 249 மனு, வருவாய்த்துறைக்கு 305 மனு, கூட்டுறவுத்துறைக்கு 29 மனு, மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 27 மனு என மொத்தம் 760 போ் மனு அளித்தனா்.
திமுக ஒன்றிய பொதுக்குழு உறுப்பினா்கள் காசி, கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, அவைத் தலைவா் பரசுராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணியை பையூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு
நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றாா்.
முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஆரணி நகரத்தில் உள்ள 22, 23, 24, 25 ஆகிய வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகரச் செயலா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

