பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன் (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் தூங்கியுள்ளாா்.
பின்னா், புதன்கிழமை காலை சென்று பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த நான்கரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.