செய்திகள் :

'இந்தியா நினைத்தால் நாளைக்கே 25% வரியில் இருந்து தப்பிக்க முடியும்' - ட்ரம்பின் ஆலோசகர் பேச்சு

post image

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துவிட்டது.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அமெரிக்க தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது...

"இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அதன் மீதான கூடுதல் 25 சதவிகித வரி எளிதாக நாளைக்கே நீங்கிவிடும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ

ஆனால், இந்தியா அதை செய்யாமல் அடம்பிடிக்கிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவின் இறையாண்மை உரிமை என்று பேசிக்கொண்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அது மாதிரி இந்தியா நடந்துகொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவோ சர்வாதிகாரியைப் போல நடந்துகொள்கிறது.

இந்திய பிரதமர் மோடி சிறந்த தலைவர். இந்தியா ஒரு வலுவான ஜனநாயக நாடு.

ஆனாலும், அது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி கொண்டிருக்கிறது. இந்தப் பணத்தை ரஷ்யா உக்ரைன் உடனான போருக்குப் பயன்படுத்துகிறது. அதனால், இது ஒரு 'மோடி போர்'." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`விஜய் வருகை பல அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை' - டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயல... மேலும் பார்க்க

கழுகார் : `கன்ட்ரோலில் சொத்துகள்’ - ஆளும் தரப்பிலிருந்து `சின்ன தலைவி’க்கு ஆதரவு கொடுப்பது யார்?

மனம் வெதும்பும் மீசைத் தலைவர்!“கூட்டணியில் இருந்து என்ன பயன்?”தமிழகத்தையே உலுக்கிய ஆணவப் படுகொலைக்குப் பிறகு, முதன்மையானவரைச் சந்தித்த மீசைத் தலைவர், ‘ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை’ உடனடியாக நிறைவே... மேலும் பார்க்க

'ட்ரம்ப் வரியால் திருப்பூரில் ரூ.3,000 கோடி ஏற்றுமதி பாதிப்பு' - முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் 68 சதவிகிதம் திருப்பூரில் இருந்து தான் செல்கிறது. ட்ரம்பின் வரியால், ... மேலும் பார்க்க

‘Vote Chori’ Row : `வாக்குத் திருட்டும், ஜனநாயக பேராபத்தும்!' - கான்ஸ்டன்டைன் ரவிந்திரன் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)திமுக செய்தித் தொடர்பு செயலாளர், ஆசிரியர்,The... மேலும் பார்க்க