ஐஐடியில் 28 அரசுப் பள்ளி மாணவர்கள்: "திராவிட மாடல் அரசின் பொய்" - என்ன சொல்கிறார...
Vijay Shankar: "தமிழ்நாடு அணியில் எனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வு" - விஜய் சங்கரின் விளக்கம் என்ன?
தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வு இருப்பதே, வரவிருக்கும் (Domestic Season) உள்ளூர் தொடருக்காக திரிபுரா அணிக்கு மாறும் முடிவை எடுக்கக் காரணம் எனத் தமிழ்நாடு அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
மூன்று முறை தமிழ்நாடு அணிக்காக விஜய் ஹசாரே தொடரை வென்ற விஜய் சங்கர், நடந்து வரும் புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் நடுவில் மாநில அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முதல் போட்டியில் விளையாடிய அவர், இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்றிதழைப் பெற்று, தமிழக அணியுடனான தனது 13 ஆண்டுக்கால தொடர்பை முடித்துக் கொண்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், விஜய் சங்கர்,``நான் வேறு அணியில் விளையாட வேண்டும் என ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால், இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
கடந்த சீசனில் நான் சிறப்பாகச் செயல்பட்டேன். ஆனால் இந்த ஆண்டு மீண்டும் அதே நிலைதான் நீடிக்கிறது. எனக்கு எந்தத் தெளிவும் கிடைக்கவில்லை. நான் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவு மிகவும் கடினமானது.
கிட்டத்தட்ட 23 வருடங்கள் தமிழ்நாட்டிற்காக விளையாடியிருக்கிறேன். 2011 முதல், நான் முதல் தர அணியில் ஒரு அங்கமாக இருந்து வருகிறேன்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தவிர, தேர்வாளர்கள் அல்லது வேறு யாரிடமும் எனக்கு எந்தவிதமான பாதுகாப்பான உணர்வும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக எங்கள் பயிற்சியாளரின் கருத்தையும் கேட்டேன். அதற்குப் பிறகுதான், இந்த அணியில் இடம்பிடிக்கப் போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து, அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என முடிவு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
வேறு அணிக்கு மாறுவதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, "தயவுசெய்து இந்தக் கேள்வியை தேர்வாளர்களிடம் கேட்டுவிட்டு என்னிடம் கேளுங்கள்" எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ``எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட இந்த அனுபவங்கள் நிச்சயமாக எனக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
நான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகவும் முக்கியமானது. திரிபுராவின் புதிய கலாசாரத்தையும் கற்றுக்கொள்வது அவசியம்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...