செய்திகள் :

பிறந்த நாளில் நற்செய்தி: விஷால் - தன்ஷிகா நிச்சயதார்த்தம்!

post image

நடிகர் விஷால் தனக்கு சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாள்களாக காதலித்து வந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள்.

சமூபத்தில் ’யோகி டா’ பட விழாவில் விஷாலும் தானும் காதலித்து வருவதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் ஆக. 29-ல் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் சாய் தன்ஷிகா கூறினார்.

நடிகர் சங்க தலைவரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடத்தைக் கட்டி முடித்த பிறகே திருமணம் என அறிவித்திருந்தார்.

அவர் அறிவித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகர் சங்க கட்டடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆக. 15ஆம் தேதி நடிகர் சங்கக் கட்டடம் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

என்னுடைய பிறந்தநாளில் பிரபஞ்சத்தின் மூலை முடுக்கிலிருந்து எல்லாம் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

எங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், இன்று எனது நிச்சயதார்த்தம் சாய் தன்ஷிகாவுடன் நடைபெற்றதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் பாசிட்டிவாகவும் (நேர்மறையாகவும்) ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்.

எப்போதும் போல உங்களது ஆசிர்வாதங்களை எதிர்பார்க்கிறேன் என்றார்.

Actor Vishal has posted on his X page that he is engaged to Sai Dhanshika.

கலாம் பயோப்பிக்கில் தனுஷை தேர்ந்தெடுத்தது ஏன்? ஓம் ராவத் விளக்கம்!

அப்துல் கலாம் பயோபிக்கில் நடிக்க நடிகர் தனுஷை விட யாரும் சிறந்தவர்கள் இல்லை என அதன் இயக்குநர் ஓம் ராவத் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடி... மேலும் பார்க்க

மனுஷி படம் பார்த்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! சில காட்சிகளை நீக்க உத்தரவு!

மனுஷி திரைப்படத்தைப் பார்த்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சில காட்சிகளைக் குறிப்பிட்டு, அதனை நீக்கிவிட்டு தணிக்கை வாரியத்துக்கு அனுப்ப படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ... மேலும் பார்க்க

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

மலேசியாவில் ரீமேக்காகும் கைதி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழி லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் எல்சியூவில் தொடக்க படமாக இருக்கிறது. எல்சியூ (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) படங்க... மேலும் பார்க்க

சித் ஸ்ரீராம் உருவாக்கிய புதிய பாடல்!

பாடகர் சித் ஸ்ரீராம் ’சொல்’ எனும் புதிய பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இயக்குநர் மணி ரத்னமின் கடல் படத்தில் பாடகராக அறிமுகமான சித் ஸ்ரீரா... மேலும் பார்க்க

டைமண்ட் லீக்: 2-ஆவது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா!

இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். கடந்தமுறை 90 மீட்டருக்கு எறிந்த நீரஜ் சோப்ரா இந்தமுறை அதைவிடக் குறைவாகவே எறிந்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் ந... மேலும் பார்க்க

குா்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.25 மீட்டா் ஸ்டாண்டா்ட் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் குா்பிரீத் சி... மேலும் பார்க்க