செய்திகள் :

சேலம்: "இது என் ஆசிரியர்கள் கொடுத்த வெற்றி" - செவி சவால் மாணவி டு அரசு அதிகாரி; ஒரு தன்னம்பிக்கை கதை

post image

வறுமையான பின்னணியில் இருந்தாலும், கல்வி மூலம் அரசு வேலையை எட்டிப் பிடிக்கிற பலரைப்பற்றி அடிக்கடி வாசிக்கிறோம். அதில் சில மாற்றுத்திறனாளிகள் பற்றியும் வாசித்திருப்போம்.

இதோ அந்த மாலையில் இன்னொரு பூவாக இணைகிறார் ஸ்ரீ சண்முகப்பிரியா. சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் ஊராட்சியைச் சேர்ந்த புது கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், செவி சவால் கொண்டவர்.

ஸ்ரீ சண்முகப்பிரியா
ஸ்ரீ சண்முகப்பிரியா

''அப்பா விவசாயம் பண்ணிட்டிருக்கார். வயல்ல விளைச்சல் இல்லைன்னா கூலி வேலைக்குப் போயிடுவார். அம்மாவுக்கு வீடும் குடும்பமும்தான் உலகம். எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க. எங்க மூணு பேருக்குமே டாக்டராகணும்கிறதுதான் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே... என் மொத தம்பி நீட் எக்ஸாம்ல பாஸாகிட்டான். ரெண்டாவது தம்பி நீட் கோச்சிங் போயிட்டிருக்கான். நானும் நல்லா படிப்பேன். ஆனா, என்னாலதான் டாக்டராக முடியாம போயிடுச்சி.

நான் ஏழாவது படிக்கிற வரைக்கும் காது நல்லா தான் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. அதுக்கப்புறம் காது கேக்காம போயிடுச்சு. டாக்டரைப் பார்த்தப்போ, 'இது ஊட்டச்சத்துக் குறைபாடுனால வந்திருக்கு. இத சரி செய்ய முடியாது'ன்னு சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு நல்லா புத்தித் தெரிஞ்ச வயசுங்கிறதுனால, 'இனிமே எனக்கு காது கேக்காது'ங்கிறது ரொம்ப மன உளைச்சலைக் கொடுத்துச்சு. அப்புறம் போக போக, இதான் இனிமே நம்ம வாழ்க்கைன்னு மனசைத் தேத்திக்கிட்டு நல்லா படிக்க ஆரம்பிச்சேன்.

ஒருநாள் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதின 'ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்' புத்தகத்தை வாசிச்சேன். அந்தப் புத்தகத்துல, காலேஜ்ல படிக்கிறப்போவே சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு எப்படித் தயாராகுறது அப்படிங்கிற வழிமுறைகள் இருந்துச்சு.

பத்தாம் வகுப்பு வே.மேட்டுப்பாளையத்துல இருக்கிற அரசு மேல்நிலைப்பள்ளியில படிச்சேன். என்னோட சூழ்நிலையைப் புரிஞ்சிக்கிட்டு என்னோட டீச்சர்ஸெல்லாம் நிறைய உதவி செஞ்சாங்க. 468 மதிப்பெண் வாங்கி ஸ்கூல் டாப்பரா வந்தேன். பிளஸ் ஒன், பிளஸ் டூ சேலம் இளம்பிள்ளையில இருக்கிற சுவாமி விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளியில படிச்சேன்.

இந்த ஸ்கூல்லேயும் டீச்சர்ஸ் எனக்கு அவ்ளோ சப்போர்ட் பண்ணாங்க. அதே உற்சாகத்துல 545 மதிப்பெண் வாங்கி இந்த ஸ்கூல்லேயும் டாப்பரா வந்தேன். என்னோட கனவு டாக்டராகுறதுங்கிறதால, நீட் எக்ஸாம் எழுதி பாஸானேன். ஆனா, செவி சவால் இருக்கிறதால மருத்துவம் படிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்னால அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கவே முடியல. அம்மா தான் என்னைத் தேத்தினாங்க. நானும் நடைமுறையை ஏத்துக்கிட்டு அரசு கலைக்கல்லூரியில பி.எஸ்சி மேத்ஸ் சேர்ந்தேன்.

காலேஜ்ல ஃப்ரீ பீரியட்ஸ் கிடைக்கிறப்போ எல்லாம் அங்க இருந்த லைப்ரரிக்குப் போயி ஏதாவது புக்ஸ் படிச்சிட்டிருப்பேன். ஒருநாள் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதின 'ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்' புத்தகத்தை வாசிச்சேன். அந்தப் புத்தகத்துல, காலேஜ்ல படிக்கிறப்போவே சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு எப்படித் தயாராகுறது அப்படிங்கிற வழிமுறைகள் இருந்துச்சு. எனக்குள்ள டி.என்.பி.எஸ்.சி-யில பாஸாகி எப்படியாவது ஓர் அரசு அதிகாரி ஆகிடணும்கிற எண்ணம் வந்திடுச்சு.

பி.எஸ்சி மேத்ஸோட, குரூப் எக்ஸாமுக்காகவும் தயாராக ஆரம்பிச்சேன். இதனால, எனக்கு என்ன பிரச்னை வந்துச்சுன்னா, டென் த், பிளஸ்டூ-வுல ஸ்கூல் டாப்பரா வந்த மாதிரி, காலேஜ்ல முடியல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு'' என்கிற ஸ்ரீ சண்முகப்பிரியா, அதன்பிறகு எப்படி அரசு வேலையில் சேர்ந்தார்? அவரே சொல்கிறார்.

ஸ்ரீ சண்முகப்பிரியா
ஸ்ரீ சண்முகப்பிரியா

பி.எஸ்சி மேத்ஸ் 80 சதவிகிதம் மதிப்பெண் வாங்கி பாஸானேன். பெரியார் பல்கலைக்கழகத்துல எம்.எஸ்சி மேத்ஸ் படிச்சிக்கிட்டே குரூப் 2 தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சேன். என்னோட ஆசிரியை ஒருத்தங்க தான் இந்தத் தேர்வுக்கான புத்தகமெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க.

தவிர, நானும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள்கிட்ட இருந்து அவங்களோட ஸ்கூல் புத்தகங்களை வாங்கி படிச்சேன். ஜெனரல் நாலெட்ஜுக்கு, லைப்ரரி புத்தகங்கள் கைகொடுத்துச்சு. அப்புறம் கூகுள், யூ டியூப்னு தேடித்தேடி படிச்சேன்; வீடியோ பார்த்தேன். முதல் முயற்சியிலேயே 'குரூப் 2 ஏ' எக்ஸாமை கிளியர் பண்ணிட்டேன். என்னோட எட்டாம் வகுப்புல ஆரம்பிச்ச ஓட்டத்துல முதல் வெற்றிப்படியைத் தொட்டுட்டேன். இப்போ பள்ளிக்கல்வித்துறை உதவியாளரா இருக்கேன்.

எனக்கிருக்கிற செவி சவால் மட்டுமில்லீங்க, எப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிக்கும் குடும்பமும் ஆசிரியர்களும் துணை நின்னா வெற்றி நிச்சயம். என்னோட இந்த வெற்றி என் ஆசிரியர்கள் கொடுத்தது. இது அவர்களுக்கே சமர்ப்பணம்'' என்கிறார் நெகிழ்ச்சியாக.

வாழ்த்துகள்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`350 மி.லி-ல ஒரு உசுர காப்பாத்த முடியும்னா, என்னங்க யோசனை?'- 25 ஆண்டுகளாக ரத்ததானம் செய்யும் இளைஞர்!

ஒருவர் தானமாக கொடுக்கிற ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று பிரிக்கப்பட்டு மூன்று நோயாளிகளைக் காப்பாற்றுகிறது. மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்ததானத்தின் போது ... மேலும் பார்க்க

``ஒரு வேளை சாப்பாடு, ஒரு நாள் உணவாக வயிறு நிறைகிறது'' - ஈரோடு சிறகுகளின் பசி போக்கும் உன்னத பணி

பசி போக்கும் `ஈரோடு சிறகுகள்'எத்தனை பொருளை வைத்திருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் மனிதன் உணவைத் தான் தேடுகிறான். அரையடி வயிறு இதை நிரப்பிட எத்தனை போராட்டங்கள்.தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ... மேலும் பார்க்க

''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' - மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை கதை!

பார்வை சவால் கொண்ட மதுரையைச் சேர்ந்த கண்ணன், மடிக்கணினியை அத்தனை லாவகமாகப் பயன்படுத்துகிறார். 2015-ல் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் 422 மதிப்பெண்கள் வாங்கி தமிழக அளவில் முதலிடம... மேலும் பார்க்க

`பள்ளி படிக்கும்போதே 2 கின்னஸ் சாதனைகள்; அடுத்து ஒலிம்பிக்தான்' - 9ம் வகுப்பு மாணவியின் லட்சிய பயணம்

நம்ம சென்னையில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஸ்ரீ ஓவியசேனா, ஒருமுறை அல்ல இருமுறை கின்னஸ் சாதனை படைத்து ஒலிம்பிக் கனவை நோக்கி தயாராகிக் கொண்டிருக்கிறார்.இந்தச் சிறுவயதிலே இத்தனைச் சாதனைகளோடு கனவு... மேலும் பார்க்க

கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

திருப்பூர், வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங்கு ரோடு ஏவிபி பள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு போலீஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் நள்ளிரவு 12 மணி அளவ... மேலும் பார்க்க

Human Story: ''நான் படிச்ச கல்வி என்னைக் கைவிடல; பொண்ணுங்க படிக்கணும்'' - ஓர் ஆசிரியையின் கதை!

பொண்ணுங்க படிக்கணும் படிக்கணும்னு சொல்றதுக்குப் பின்னாடி எவ்ளோ கனமான காரணமிருக்கு அப்படிங்கிறதுக்கு, நாமக்கல் மாவட்டம் தத்தாதிருபுரம் கிராமத்தைச் சேர்ந்த கவிக்குயில் வாழ்க்கையும் ஓர் உதாரணமாகிருக்கு. ... மேலும் பார்க்க