மாதம்பட்டி ரங்கராஜ்: "கருவைக் கலைக்கச் சொல்லி அடித்துத் துன்புறுத்தினார்" - ஜாய்...
கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!
மலேசியாவில் ரீமேக்காகும் கைதி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழி லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் எல்சியூவில் தொடக்க படமாக இருக்கிறது.
எல்சியூ (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) படங்களில் கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
அடுத்ததாக கைதி 2, ரோலக்ஸ் ஆகிய படங்கள் உருவாக இருக்கின்றன.

இந்நிலையில், மலேசியாவிம் மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டாடோ ஆரோன் அஜிஸ் நாயகனாக நடித்துள்ளார்.
க்ரோல் அஜ்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தை என்டிஓஎம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் வருகிற நவ.9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கதாநயகியே, பாடல்களே இல்லாமல் ரூ.100 கோடி வசூலித்த படமாக கைதி இருந்தது குறிப்பிடத்தக்கது.