செய்திகள் :

ராஜஸ்தான்: 55 வயதில் 17வது குழந்தை; கிராமத்தினரை அதிர்ச்சியடையச் செய்த பெண்மணி; பின்னணி என்ன?

post image

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் 17 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அங்குள்ள உதைப்பூர் மாவட்டத்தில் இருக்கும் லிலாவாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம். இவரது மனைவி ரேகா(55). இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 4 ஆண் குழந்தை உட்பட 5 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டன்.

எஞ்சிய அனைத்து குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில் ரேகா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு ஜதோல் ஆரம்பச் சுகாதார மையத்தில் 17வது குழந்தை பிறந்திருக்கிறது. இது அவர்களின் கிராமத்தில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ரேகாவின் இரண்டு மகன்கள் மற்றும் 3 மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ரேகாவிற்குப் பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டன. அப்படி இருந்தும் ரேகா குழந்தை பெற்றுக்கொள்வதைக் கைவிடவில்லை. ரேகாவின் கணவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தனக்குப் பிறந்துள்ள எந்தக் குழந்தையையும் படிக்க வைக்கவில்லை. தனது பிள்ளைகளுக்குக் கூட கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை.

ரேகாவிற்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் ரோஷன் இது குறித்துக் கூறுகையில், ''பிரசவத்திற்கு வந்தபோது தன்னிடம் இது 4வது குழந்தை என்று தெரிவித்தார். ஆனால் அதன் பிறகுதான் அவருக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளது என்று தெரிய வந்தது. அதிகப்படியான பிரசவம் காரணமாக அவரது கர்ப்பப்பை மிகவும் பலவீனம் அடைந்துள்ளது.

அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படவும், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

குடும்பத்தினருடன் ரேகா
குடும்பத்தினருடன் ரேகா

இது குறித்து ரேகாவின் மகள் ஷீலா கூறுகையில், ''நாங்கள் ஏற்கனவே கடுமையான கஷ்டத்தில் இருக்கிறோம். எனது அம்மாவிற்கு அதிகப்படியான குழந்தைகள் இருப்பதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்'' என்றார்.

ரேகாவின் கணவர் ராம் இது குறித்துக் கூறுகையில், ''எங்களுக்குச் சொந்த வீடு கூட கிடையாது. அன்றாட செலவுகளைச் சமாளிக்கவே சிரமப்படுகிறேன். குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுக்க 20 சதவீத வட்டிக்குக் கடன் வாங்குகிறேன். பல லட்சத்தைத் திரும்பக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் கடனை முழுமையாக அடைக்கமுடியவில்லை'' என்று தெரிவித்தார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சீனா: "மன அழுத்தைப் போக்கவே இதைச் செய்தேன்" - பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரத்தத்தைத் திருடிய நபர்

சீனாவைச் சேர்ந்த லி என்பவர் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெருவெள்ளம்: படகில் சென்ற பத்திரிகையாளரின் நேரலை வைரல்!

கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 739 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2,400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.செப்டம்ப... மேலும் பார்க்க

Driver Amma: துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டி அசத்தும் 72 வயது கேரளப் பெண்மணி; யார் இந்த மணியம்மா?

72 வயது இந்தியப் பெண்மணி ஒருவர் துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. வைரலாகும் வீடியோவின் படி, கேரளா சேலை அணிந்து சொகுசு காரை ஓட்டுகிறார் அந்தப் பெண்மணி.... மேலும் பார்க்க

பீகார்: பாம்பு கடித்த பெண்ணை மீண்டும் பாம்பு அருகே படுக்க வைக்கும் கிராமவாசிகள்; பின்னணி என்ன?

பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு கடித்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் பாம்பை அருகில் வைத்து அந்தப் பெண்ணைப் படுக்க வைத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரல... மேலும் பார்க்க

Orange Shark: ஆழ் கடலின் வண்ண அதிசயம்... விஞ்ஞானிகளுக்கே வியப்பூட்டிய ஆரஞ்சு சுறா!

கடலின் ஆழங்களில் மறைந்து இருக்கும் ரகசியங்கள் சில நேரங்களில் நம்மை மூச்சுத்திணறச் செய்யும் அளவுக்கு ஆச்சர்யப்படுத்தும். “சுறா என்றாலே பயம்!” – அப்படித்தான் பலர் நினைப்பார்கள். ஆனால், இந்த முறை ஒரு சுற... மேலும் பார்க்க

காதலியிடமிருந்து வந்த கடிதம்; 500 புஷ்அப்ஸ் செய்து பெற்ற ராணுவ அதிகாரி - `ஓர்' அடடே சம்பவம்!

தற்போது சமூக ஊடகங்களில் காதலை பகிர வீடியோக்கள், எமோஜிகள் எல்லாம் இருந்தாலும் கையெழுத்துக் கடிதங்கள் கொண்டிருந்த பாசம் மனதை வருடும். அதற்குச் சான்றாக, முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி கேப்டன் தர்மவீர் சி... மேலும் பார்க்க