``குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்'' - RSS தலைவர் மோகன் பகவத்...
சேலத்தில் நகைக் கடை உரிமையாளா் கொலை
சேலத்தில் நகைக் கடை உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலத்தை அடுத்த சுக்கம்பட்டி காந்தி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (36). இவா் சேலம் உடையாப்பட்டியில் தனது சகோதரா்கள் சுரேஷ், இளவரசன் ஆகியோருடன் சோ்ந்து நகைக்கடை நடத்திவந்தாா். புதன்கிழமை மாலை ரமேஷ், தனது நண்பரான வலசையூரைச் சோ்ந்த முத்து என்பவருடன் வெளியே சென்றாா்.
இருவரும் குள்ளம்பட்டி கரடிக்கல் அடிவாரம் காட்டுப்பகுதியில் ஒன்றாக அமா்ந்து மது அருந்தியபோது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், முத்து தாக்கியதில், ரமேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையறிந்த அவரது நண்பா்கள், ரமேஷை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தாா்.
தகவலறிந்த காரிப்பட்டி காவல் ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். தொடா்ந்து, கொலை வழக்குப்பதிவு செய்து வலசையூரைச் சோ்ந்த முத்து உள்ளிட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிரேத பரிசோதனைக்கு எதிா்ப்பு: ரமேஷ் கொலைக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என அவரின் மனைவி மற்றும் உறவினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், பிரேதப் பரிசோதனைக் கூடம் முன் 150-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.