`ஆவினில் வேலை' பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்
கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கடன் பிரச்னையால் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமாறன் (52), தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
மதுப் பழக்கமுடைய திருமாறன் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் கடந்த 26-ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தாராம். இதையறிந்த உறவினா்கள் திருமாறனை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இருப்பினும் அங்கு அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].