பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உய...
Daily Roundup: ட்ரம்ப் வரியால் தமிழகத்துக்கு பாதிப்பு `டு' ஆணவக்கொலை தனிச்சட்டம் வேண்டி தவெக மனு!
முக்கியச் செய்திகள்
மும்பையில் தாதா வரதராஜன் முதலியார் மகன் மோகன் மரணமடைந்தார்.
"நல்ல உள்ளடக்கம் கொண்ட படைப்புகளுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை" என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப் 50% வரியால் திருப்பூரில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.3,000 கோடி பாதிக்கப்படும் என ஸ்டாலின் எக்ஸ் பதிவு. ஆயிரம் கோடி அளவிலான இறால் ஏற்றுமதியும் பாதிக்கப்படலாம் என கணிப்பு.

"இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அதன் மீதான கூடுதல் 25 சதவீத வரி எளிதாக நாளைக்கே நீங்கிவிடும். ஆனாலும், அது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி கொண்டிருக்கிறது. இந்தப் பணத்தை ரஷ்யா உக்ரைன் உடனான போருக்குப் பயன்படுத்துகிறது. அதனால், இது ஒரு 'மோடி போர்'," என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு பரிசீலனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
"விஜய், முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் எனக் கூறியதில் தவறில்லை" என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை மேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் பி.வி. சிந்து.

ஆம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 191 பேரில், 161 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். 22 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதோடு, முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லம் பாஷாவின் சொத்துகளை, சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகளுக்கு ஈடாக பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
"அ.தி.மு.க ஆர்.எஸ்.எஸ்-ன் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க அமித்ஷா-வின் அ.தி.மு.க-வாக மாறிவிட்டது. அ.தி.மு.க-வினர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இரட்டை இலை சின்னம் மட்டும் கையில் இருக்கிறது... அ.தி.மு.க-வின் அனைத்து முடிவுகளையும் நாக்பூர் எடுக்கின்ற காலம் தொலைவில் இல்லை." - மாணிக்கம் தாக்கூர்
ஆர்.எஸ்.எஸ் பாஜகவுக்காக முடிவுகளை எடுப்பதில்லை என்றும், ஆலோசனைகளைப் பறிமாறிக்கொண்டு அவரவர் துறைகளில் சுதந்திரமாக முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றும் மோகன் பகவத் பேசியுள்ளார்.
ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம், சம்பலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் அமைத்த 3 நபர் கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்துள்ளது.