செய்திகள் :

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

post image

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில், புதிய காவல் துறையின் தலைமை இயக்குநா் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது.

சங்கர் ஜிவால் ஓய்வு!

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்றாா். அவரின் பதவிக்காலம் ஆக. 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆக.30, 31 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமையுடன் பணி ஓய்வு பெறுகிறாா்.

சங்கா் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். பொறியாளரான இவா், ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழக காவல் துறை பணியில் சோ்ந்தாா்.

மன்னாா்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய சங்கா் ஜிவால், பின்னா், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநா், உளவுப் பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையா் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். மேலும், இவா் 2 முறை குடியரசுத் தலைவா் பதக்கம் பெற்றுள்ளாா்.

புதிய டிஜிபி யார்?

தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து வரவில்லை என்று ஆகஸ்ட் 22 ஆம் தேதி மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்திருந்தது.

மாநில காவல்துறையின் தலைமை இயக்குநா் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயா் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்பே மாநில அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், கடந்த வாரம் வரை தகுதிபெறுவோரின் முன்மொழிவை தமிழக அரசு அனுப்பாததால் புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சங்கர் ஜிவால் பணிஓய்வு பெற்றவுடன் புதிய டிஜிபி நியமிக்கும் வரை பிற துறையை கவனித்து வரும் மூத்த டிஜிபி ஒருவரை சட்டம் - ஒழுங்கை கூடுதலாக கவனிக்க தமிழக அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிபி தேர்வு செய்யும் நடைமுறை என்ன?

உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின்படியும், டிஜிபி அல்லது காவல் படைத் தலைமை அதிகாரி (ஹெச்ஓபிஎஃப்) ஆக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும். அவா் பதவி ஓய்வு பெற குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது இருந்தால் மட்டுமே தகுதிப்பட்டியலில் இடம்பெற முடியும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.

இந்த விதிமுறைகளின்படி மாநில அரசு முன்மொழியும் தகுதிப்பட்டியலை யுபிஎஸ்சி தோ்வுக்குழு பரிசீலிக்கும். அதில் யுபிஎஸ்சி தலைவா் அல்லது உறுப்பினா், மாநில தலைமைச்செயலா், உள்துறைச்செயலா், தற்போதைய டிஜிபி உள்ளிட்டோா் இடம்பெறுவா். மாநில அரசின் பட்டியலில் இருந்து தகுதிவாய்ந்த அதிகாரிகளில் மூவரின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்படும். அதில் இருந்து ஒருவரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக மாநில அரசு அறிவிக்கும்.

Who is TN's Next Head of Police Force (DGP)?

இதையும் படிக்க : காற்று மாசுபாட்டை குறைத்தால் ‘இந்தியா்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்’

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

சிவகங்கை: சிவகங்கையில் பாஜக நிர்வாகி வியாழக்கிழமை நள்ளிரவில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மஜித் சாலை பகுதியைச் சேர்ந்த வ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதமாக டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை: நீதிமன்றம்

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில், சுவாமி தரிசனத்துக்கு சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளைப் பற்றி கேளுங்கள்; விஜய் பற்றி கேட்காதீர்கள்: பிரேமலதா

திருநெல்வேலி: இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது, தேர்தல் ஆணையம் ஒரு பொம்மை தான், மக்கள் பிரச்சினையை கேளுங்கள் என செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.... மேலும் பார்க்க

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்துவைக்கவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகள் ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சிக்கு பலத்த பாதுகாப்பு!

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்த முயன்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினர் தயார் நிலையில் வைக்க... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

மடப்புரம் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்குக்கு தொடர்புடைய நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரி... மேலும் பார்க்க