காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. சசிகாந்த் செந்தில்!
சென்னை மாநகராட்சிக்கு பலத்த பாதுகாப்பு!
சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்த முயன்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மாத தொடக்கத்தில் 13 நாள்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு வெளியே இன்று மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கீழ்பாக்கம் துணை ஆணையர் ஜெரினா பேகம், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெய்சந்திரன் உள்ளிட்ட 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினால், அவர்களை கைது செய்வதற்கு தயார் நிலையில் 20 மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று தீயணைப்பு வாகனங்கள், 10 -க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், காவல் ரோந்து வாகனங்களும் முன்னெச்சரிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.