மக்கள் பிரச்னைகளைப் பற்றி கேளுங்கள்; விஜய் பற்றி கேட்காதீர்கள்: பிரேமலதா
திருநெல்வேலி: இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடந்துள்ளது, தேர்தல் ஆணையம் ஒரு பொம்மை தான், மக்கள் பிரச்சினையை கேளுங்கள் என செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்தியா முழுவதும் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாகவும், தேர்தல் ஆணையம் ஒரு பொம்மை போல செயல்படுவதாகவும் கடுமையாக சாடினார். மேலும், மக்கள் பிரச்சினைகளை விட்டுவிட்டு தேவையற்ற கேள்விகளை கேட்பதாக கூறி செய்தியாளர்களுடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.