"Ram சார், Sivakarthikeyan அண்ணன் பண்ணின உதவி" - Pari | Ananda Vikatan Cinema Aw...
`75 வயதில் ஓய்வா? நான் அப்படி கூறவில்லையே! பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை’ - RSS தலைவர் மோகன் பகவத்
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பகவத் டெல்லியின் விக்யான் பவனில் நடந்த 'ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு சொற்பொழிவு' நிகழ்வில் உரையாற்றினார்.
அப்போது, ``பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பில் அவ்வப்போது சிரமங்கள் இருந்தாலும், இரு அமைப்புகளுக்கும் இடையே எந்த மோதல்போக்கும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ் அரசுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறதே தவிர ஒருபோதும் அரசு விவகாரங்களில் தலையிடுவதில்லை.

ஒருபோதும் கூறவில்லை
நம் ஆலோசனை ஏற்று முடிவெடுப்பதும் தவிர்ப்பதும் அரசின் தனிப்பட்ட உரிமை. நாட்டை நிர்வகிப்பதில் அவர்கள்தான் நிபுணர்கள்.
75 வயதில் நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது ஒருவர் ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை.
சங்கத்தில், எங்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்படுகிறது, எங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை செய்ய வேண்டும்.
எனக்கு 80 வயது ஆனாலும், ஒரு ஷாகாவை நடத்த சங்கத்தால் கூறப்பட்டால், நான் அதைச் செய்ய வேண்டியிருக்கும். சங்கம் சொல்வதை நாங்கள் செய்வோம். இஸ்லாம் இருக்கக்கூடாது என்று எந்த இந்துவும் நினைப்பதில்லை.
மதத்தின் அடிப்படையில் யாரையும் தாக்குவதில் ஆர்.எஸ்.எஸ்-க்கு நம்பிக்கை இல்லை. சாதி அமைப்பு காலாவதியானது, அது அகற்றப்பட வேண்டும்.
மேலும், சட்டவிரோத குடியேற்றம் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதைத் தடுக்க அரசுடன் சேர்ந்து சமூகமும் செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.