செய்திகள் :

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந்த எண்ணெய் உகந்தது?

post image

Doctor Vikatan: இந்தத் தலைமுறை பிள்ளைகள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விரும்புவதே இல்லை.   எண்ணெய்க் குளியல் உண்மையிலேயே அவசியம்தானா, என் 17 வயது மகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. எண்ணெய்க் குளியல் எடுத்தால் முடி உதிர்வது நிற்கும் என்று சொன்னால் கேட்க மறுக்கிறாள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உண்மையிலேயே முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எண்ணெய்க் குளியலுக்கு எந்த எண்ணெய் உகந்தது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்

தலத் சலீம்

எண்ணெய்க் குளியல் என்பது பலகாலமாக நம்மிடையே தொடரும் மிகச் சிறந்த பாரம்பர்யம். அது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடலைக் குளிர்ச்சியாக்கி, தசைகளை வலுவாக்கி, சரும ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது. 

ஆனால், இந்தக் காலத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பதையோ, எண்ணெய்க் குளியல் எடுப்பதையோ பலரும் விரும்புவதில்லை. எண்ணெய்க் குளியலை வாழ்வியல் முறையாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது.  

வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது கூந்தலை மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். ரிலாக்ஸ் செய்யும். எண்ணெய்க் குளியல் எடுப்பதால் முடி உதிர்வு குறையும் என்பது உண்மைதான்.

ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு கூந்தல் உதிர்வும் அதிகமிருக்கும். எனவே, உங்கள் மகளை ஜங்க் உணவுகளைத் தவிர்த்து புரதச்சத்து அதிகமுள்ள பருப்புகள், தானியங்கள், முளைகட்டிய பயறு வகைகள், விதைகள் போன்றவற்றைச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். தூக்கமின்மையும் முடி உதிர்வுக்கு காரணம் என்பதால் சரியான நேரத்துக்கு சரியான அளவு தூக்கமும் அவசியம்.

எண்ணெய்க் குளியலுக்கு சுத்தமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெயே போதுமானது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் வேப்பிலை சேர்த்துக் கொதிக்கவைத்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

முடி உதிர்வு
முடி உதிர்வு

ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் - மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும்.  அதே அளவு தேங்காய் எண்ணெயில் சிறிது வெந்தயம் சேர்த்து வெடிக்கும்வரை காய்ச்சவும்.

பிறகு அந்த எண்ணெயை மற்ற எண்ணெய்க் கலவையோடு சேர்த்து ஆற வைத்து, பாட்டிலில் நிரப்பவும். தேவைப்படும்போது இந்த எண்ணெயைத் தலையில் தடவி மிதமான மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கவும். நல்லெண்ணெயில் வேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். 

கரிசலாங்கண்ணிக் கீரை, துளசி, பொடுதலை, செம்பருத்தி இலை, மருதாணி எல்லாம் தலா ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். மற்ற இலைகளை முதலில் அரைத்துவிட்டு, கடைசியாக செம்பருத்தி இலை சேர்த்து அரைத்துச் சாறு எடுக்கவும்.

ஒரு கப் சாற்றுக்கு 3 கப் அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெயை சூடுபடுத்தி, அதில் சாறு சேர்த்துக் கொதிக்க ஆரம்பிக்கும்போது உலர்ந்த ரோஜா இதழ்கள் 2 டேபிள்ஸ்பூன், சிறிது எலுமிச்சைத் தோல் விழுது சேர்த்து, எண்ணெய் பிரிந்துவரும்வரை நன்கு கொதிக்க விடவும்.  இரண்டு, மூன்று நாள்களுக்கு அப்படியே வைத்திருந்து, வடிகட்டி உபயோகிக்கவும். கூந்தல் உதிர்வுக்கு இதுவும் நல்ல தீர்வளிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 65 வயதாகிறது. அவருக்கு லேசான காய்ச்சல் அடித்தாலேஉடனே பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னால் கேட்க மாட... மேலும் பார்க்க

Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?

Doctor Vikatan:சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன், சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிட்ட பிறகோ, சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டியதை சாப்பாட்டுக்கு முன்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண் களிக்கம் எனும் சித்த மருந்து; கண் நோய்கள் அனைத்துக்கும் தீர்வாகுமா?

Doctor Vikatan: கண் களிக்கம் என்ற பெயரில் புழக்கத்தில் இருக்கும் சித்த மருந்து, கண் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்குத் தீர்வு தரும் என்று சொல்கிறார்களே, அது எந்த அளவுக்கு உண்மை?-மனோபாலா, விகடன் இணையத்திலி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் மஞ்ஜிஷ்டா சோப், ஆயில் - அப்படி என்ன ஸ்பெஷல்?

Doctor Vikatan: ஒரு காலத்தில் குங்குமாதி தைலத்துக்கு இருந்தது போல இப்போது பலரும் மஞ்சிஷ்டா எண்ணெய், மஞ்சிஷ்டா சோப் என தேடித்தேடி உபயோகிக்கிறார்கள். மஞ்சிஷ்டா என்பது என்ன, அது எல்லோருக்கும் ஏற்றுக்கொள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல்நலமில்லாத குழந்தைக்கு ஊசி, மாத்திரை, சிரப் - எது சரி?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என மருத்துவரிடம் அழைத்துப் போகிறோம். சில மருத்துவர்கள் உடனே ஊசி போடுகிறார்கள். சிலர், ஊசி வேண்டாம் என மாத்திரை, சிரப் கொடுக்கிறார்கள். இந்த இரண்டில் எது... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிபட்ட காயங்கள் ஏற்படுத்திய தழும்புகள், நிரந்தரமாகத் தங்கிவிடுமா?

Doctor Vikatan: என் வயது 34. எனக்கு சமீபத்தில் ஒரு விபத்தில் அடிபட்டது. அதனால் ஏற்பட்ட காயங்கள் தழும்புகளாக மாறிவிட்டன. அவை நிரந்தரமாக தங்கிவிடுமா, பழைய சருமத்தைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்... தழும... மேலும் பார்க்க