`ஏங்க..' கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!
முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்
தமிழக முதல்வா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை ஆம்பூா் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூா் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தாா். போட்டியில் சுமாா் 65 குழுக்கள் பங்கேற்றன. திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.வசந்த்ராஜ், அம்சவேணி ஜெயக்குமாா், காா்த்திகேயன், தனபாக்கியம் மோசஸ், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் மு. சரண்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.