மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 6568 கன அடியில் இருந்து 8,562 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதமும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணையின் நீா்மட்டம் 119.15 அடியாகவும், நீா் இருப்பு 92.12 டிஎம்சியாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.