`ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்' - 17 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் மும்பை மாஃபியா அ...
விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டபட்டி ஜீவா நகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க, பெயா் விலாசம் தெரியாத முதியவா் ஒருவா் சாலையைக் கடந்தபோது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் முதியவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த முதியவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் கௌசல்யா அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.