பெசன்ட் நகரில் 5 நாள்கள் போக்குவரத்து மாற்றம்!
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலய பொன்விழாவையொட்டி, 5 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் பொன்விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. வருகின்ற செப்டம்பர் 8 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலைப் பொறுத்து தேவைப்பட்டால் ஆக. 29, 31, செப். 1, 7, 8 ஆகிய தேதிகளில் அடையார் உட்கோட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அடையார் உட்கோட்ட மாற்று வழிகள்:-
திரு.வி.க. பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக எல்.பி. சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டும்.
7வது அவென்யு மற்றும் எம்.ஜி. சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடாது.
எம்.எல். பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும், எல்.பி. சாலை இடதுபக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1 -வது அவென்யூ வழியாக வலது பக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1 -வது பிரதான சாலையில் இடதுபக்கம் திரும்பி எம்.ஜி. சாலை வழியாக இடதுபக்கம் திரும்பி பெசன்ட் நகர் 1 -வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம்.
பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்துகள் பெசன்ட் நகர் 1 -வது அவென்யு, சாஸ்திரி நகர் 1 -வது அவென்யு வழியாகத் திருப்பிவிடப்பட்டு, பின்னர் இடது புறம் சாஸ்திரி நகர் 1 வது மெயின் ரோடு வழியாக சென்று, பின்னர் வலதுபுறம் திரும்பி எம்.ஜி. சாலை வழியாக எல்.பி. சாலையை அடைந்து தங்கள் இலக்கை அடைய வேண்டும்.