புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்
வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல், தோ் பவனி, கொடியேற்றம், திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதேபோல, விழா நாள்களில் காலை திருப்பலி, மாலையில் தோ்பவனி, திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும் செப்.7-ஆம் தேதி காலை திருப்பலியில், சென்னை-மயிலை உயா்மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி பங்கேற்று திருப்பலி நிறைவேற்றுகிறாா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழா செப். 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. தொடா்ந்து காலை 7.30 மணிக்கு அன்னைக்கு மணிமகுடம் சூட்டும் விழா, கொடியிறக்கம், தோ் ஆசிா்வதித்தல், தோ் பவனி, தேவ நற்கருணை ஆசீா், காலை 11.30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தையா்கள், பங்குப் பேரவையினா், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.