செய்திகள் :

``குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்'' - RSS தலைவர் மோகன் பகவத் பேசியது என்ன?

post image

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.

இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில், குருகுல் கல்வி பற்றி பேசிய அவர், "பாரதத்தைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதம் தேவைப்படுகிறது. வேத காலத்தின் 64 அம்சங்களும் கற்பிக்கப்பட வேண்டும்.

குருகுலக் கல்வியை மாற்றாமல், அதனை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும். நமது குருகுல் மாதிரி பின்லாந்தின் கல்வி மாதிரியைப் போன்றது.

கல்வியில் முன்னணி நாடான பின்லாந்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க தனிப் பல்கலைக்கழகம் உள்ளது" என்று கூறினார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

கல்விக் கொள்கை பற்றி பேசிய மோகன் பகவத், "கல்வி மிகவும் முக்கியமானது. கல்வி என்பது வெறும் தகவல்களைச் சேகரித்து வைப்பது மட்டுமல்ல; ஒருவரை மனிதனாக மாற்ற வேண்டும். அத்தகைய கல்வி முறையே எதிர்பார்க்கிறோம்.

நமது கல்வி அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது. நாம் அடிமைகளாக இருந்த போது புதிய கல்வி முறை கொண்டு வரப்பட்டது. ஆட்சியாளர்களுக்கு ஏற்ப அமைப்பு மாற்றப்பட்டது.

ஆனால் இப்போது சுதந்திரம் பெற்று விட்டோம். நாம் அரசுகளை நடத்துவது மட்டும் அல்லாமல், மக்களும் அதனை பின்பற்ற வேண்டும். இந்த திசையில் நாம் பயணிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இந்த விஷயங்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது," என்று அவர் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`ஏங்க..' கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்திலேயே கிடையாது. இந்தமாதிரி ஊரு எங்கயாச்சும் உண்டா? ஏங்க... தனி ஐலாண்டுங்க. அங்கப் பாருங்க, காஷ்மீர் மாதிரி இ... மேலும் பார்க்க

எண்ணெய் கொள்முதல்: ``இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்'' - USA வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது.சமீபத்தில், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்த... மேலும் பார்க்க

"இந்தியா கூட்டணி பீகாரில் பெறும் வெற்றிதான், அடுத்தடுத்த வெற்றிக்கான அடித்தளம்" - மு.க. ஸ்டாலின்

பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங... மேலும் பார்க்க

"இந்து பையனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா?" - சீமான் கேள்வி

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வை... மேலும் பார்க்க

"ஓணம் பண்டிகைக்கான சிறப்பு விடுமுறை ரத்தா?" - கேரள அமைச்சர் சிவன்குட்டி விளக்கம்!

கேரளாவில் ஓணம் (Onam) மிகப்பெரிய பாரம்பரிய திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னரை (மாவேலி) நினைவுகூர்ந்து கேரளாவின் அனைத்து மதத்தினரும் 10 நாள் கொண்டாட்டமாகச் சிறப்பிக்கும் திர... மேலும் பார்க்க

Transgender’s hostel: கேரளாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட திருநங்கை மாணவர்கள் விடுதி!

கேரளாவில் திருநங்கை மாணவர்களுக்காக முதல்முறையாக தனிச்சிறப்பு விடுதி இன்று ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த விடுதிக்கு ... மேலும் பார்க்க