செய்திகள் :

US 50% tariff: பாதிக்கும் திருப்பூர், ஆம்பூர், ராணிப்பேட்டை; அமெரிக்காவின் மாற்று சந்தைகள் என்ன?

post image

இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவிகித வரி நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது.

இந்திய அரசு என்ன சொல்கிறது?

இந்த வரி விதிப்பு குறித்து இந்திய அரசு கூறுவதாவது:

இந்த வரி விதிப்பினால் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கா ஏற்றுமதியை பாதிக்கப்படும். இதன் மதிப்பு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 48–60 பில்லியன் டாலர் ஆகும்.

இந்த வரி விதிப்பினால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் போக்குவரத்து செலவும் அதிகமாகும். மேலும், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும்.

ஏற்றுமதி
ஏற்றுமதி

வரி விதிப்பினால் அதிகம் பாதிக்கப்படும் துறைகள் எவை?

இறால்:
இந்தியாவின் டாப் இறால் சந்தையே அமெரிக்கா தான். 2024–25 நிதியாண்டில், மொத்த இறால் ஏற்றுமதியில் 32.4 சதவீதம் அமெரிக்காவிற்கு தான் நடந்துள்ளது.

ரத்தினங்கள் மற்றும் நகைகள்:
இந்தத் துறையில் தற்போது 52.1 சதவீதமாக வரி அதிகரித்துள்ளது. இந்தியா தனது மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதத்தை அமெரிக்காவிற்கு தான் செய்கிறது.

தற்போதைய விலை ஏற்றத்தால், இந்தத் துறையில் சூரத், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் பாதிப்படையலாம்.

ஜவுளித் துறை:
இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 35 சதவீதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. அதன் தற்போதைய வரி 13.9 சதவீதத்தில் இருந்து 63.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தத் துறை பாதிப்பினால் திருப்பூர், நொய்டா, குருகிராம், பெங்களூரு, லூதியானா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.

கம்பளம்:
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு 58.6 சதவீதம் செல்கிறது. இதன் வரி தற்போது 2.9 சதவீதத்தில் இருந்து 52.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. பதோஹி, மிர்சாபூர் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.

ஜவுளித் துறை
ஜவுளித் துறை

கைவினைப் பொருள்கள்:
இந்தத் துறையின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. இதனால், தற்போது பாதிக்கப்பட உள்ள பகுதிகள் ஜோத்பூர், ஜெய்ப்பூர், மொராதாபாத் மற்றும் சஹாரன்பூர் ஆகும்.

தோல் மற்றும் காலணிகள்:
இந்தத் துறையில் 50 சதவீதம் வரி விதிக்கப்படும். இதனால் ஆக்ரா, கான்பூர், ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.

விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு:
இந்தத் துறையில் 50 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. பாஸ்மதி அரிசி, தேநீர், மசால் பொருள்கள் உள்ளிட்ட பல விவசாயப் பொருள்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்.

எந்தெந்த நாடுகள் பலனடையும்?

இந்திய சந்தையை மாற்றி, அமெரிக்கா பிற உலக நாடுகளிடம் இருந்து தங்களது இறக்குமதிகளை செய்ய உள்ளது. அவை:

ஜவுளித்துறை: வங்கதேசம், வியட்நாம், மெக்சிகோ, CAFTA-DR

கம்பளம்: துருக்கி, பாகிஸ்தான், நேபாளம், சீனா

கைவினைப் பொருள்கள்: வியட்நாம், சீனா, துருக்கி, மெக்சிகோ

தோல் மற்றும் காலணிகள்: வியட்நாம், சீனா, துருக்கி, மெக்சிகோ

விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு: பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், கென்யா, இலங்கை

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Daily Roundup: ட்ரம்ப் வரியால் தமிழகத்துக்கு பாதிப்பு `டு' ஆணவக்கொலை தனிச்சட்டம் வேண்டி தவெக மனு!

முக்கியச் செய்திகள்மும்பையில் தாதா வரதராஜன் முதலியார் மகன் மோகன் மரணமடைந்தார்."நல்ல உள்ளடக்கம் கொண்ட படைப்புகளுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை" என்று பாலிவுட் இயக்குநர் அ... மேலும் பார்க்க

``ரூ.28 கோடி வரி முறைகேடு; மேயர் பதவி விலகியபின் விசாரிப்பதுதான் முறையாக இருக்கும்'' - செல்லூர் ராஜூ

எடப்பாடி பழனிசாமி மதுரை பிரசாரப் பயணம்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 4 நாட்களுக்கு மது... மேலும் பார்க்க

``ட்ரம்பின் 50% வரியை ஈடுசெய்ய, இந்தியா என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” - நிதி அமைச்சகம் விளக்கம்

நேற்றுமுதல் இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது.இந்த நிலையில், நேற்று இந்திய நிதி அமைச்சகம் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வை வெளியிட்டது.அதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்... மேலும் பார்க்க

``உலக வர்த்தகம் தானாக நடைபெற வேண்டும்; அழுத்தத்தின் கீழல்ல'' - RSS தலைவர் மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.அதில், இரண்டாம் நாளான நேற்று “100 ஆண்டுகளின் சங்கப் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: 8 வயதுக் குழந்தைக்கு டான்சில்ஸ் பாதிப்பு; ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு டான்சில்ஸ் பாதிப்பு பாடாகப் படுத்தியதால், 9 வயதில் ஆபரேஷன் செய்தோம். இளையவனுக்கும் அதே பிரச்னை. அடிக்கடி சளி, காய்ச்சல் பிரச்னைகளால் அவதிப்படுக... மேலும் பார்க்க

Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்!

இனிப்பையும் கொழுப்பையும் தவிர்ப்பார்கள். கலோரிகளைக் கணக்குப் பார்த்துச் சாப்பிடுவார்கள். எடை விஷயத்தில் இப்படியெல்லாம் அக்கறை எடுத்துக்கொண்டும் உடல் பருமன் குறையவில்லை என்று புலம்புவார்கள். மேலே சொன்ன... மேலும் பார்க்க