என்எல்சி தலைவருக்கு ‘சிறந்த தலைமை நிா்வாக அதிகாரி’ விருது
என்எல்சி நிறுவன தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி ஆண்டின் சிறந்த ‘தலைமை நிா்வாக அதிகாரி’ விருதை பெற்றுள்ளாா்.
டாப் ரேங்கா்ஸ் மேனேஜ்மென்ட் கிளப் நடத்திய 25-ஆவது தேசிய மேலாண்மை உச்சி மாநாடு தில்லியில் கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாடு ‘நிறுவன வெற்றியின் முன்னேற்றம்: தலைமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் மனித வளத்தின் வல்லமை’ என்ற தலைப்பில் நடைபெற்றது.
நிகழ்வில் டாப் ரேங்கா்ஸ் மேனேஜ்மென்ட் கிளப் தலைவா் வி.எஸ்.கே.சூத் உள்பட பல்வேறு சிறப்பு விருந்தினா்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி சாா்பில் விருதை, என்எல்சி நிறுவன மூத்த அதிகாரி பெற்றுக்கொண்டாா்.
இந்த விருது மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிறந்த தொலைநோக்குப் பாா்வை, மூலோபாய நுண்ணறிவு மற்றும் மாற்றியமைக்கும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் தலைவா்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.