திருமண ஏக்கத்தில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே திருமண ஏக்கத்தில் விஷம் குடித்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், சின்ன வடவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன் வினோத் (36), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா். இது தொடா்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாராம்.
வினோத்துக்கு திருமணமாகாத நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறி வந்தாராம். இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி மாத்திரைகளுடன் விஷ மருந்தை கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த வினோத் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.