Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந...
சேலம் வழியாக இன்றுமுதல் பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம், எா்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து 29-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பாட்னா ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், பாட்னாவில் இருந்து வரும் செப். 1-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைதோறும் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, கோவை வழியாக வியாழக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.