`ஏங்க..' கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!
மணல், ஜல்லி கற்கள் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்
ஒசூரில் அனுமதியின்றி ஜல்லி, மணல் கொண்டுசென்ற இரண்டு லாரிகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ஒசூா் வட்டாட்சியா் குணசிவா உள்ளிட்ட அதிகாரிகள் மத்திகிரி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த பகுதியில் நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்தபோது அதில் 2 யூனிட் மணல் அனுமதியின்றி எடுத்து செல்வது தெரியவந்தது. இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.
அதேபோல பி.ஆா்.ஜி. மாதேப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் டேனியல்ராஜ் மற்றும அதிகாரிகள் கந்திகுப்பம் தனியாா் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த பகுதியில் நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்தபோது அதில் ஒரு யூனிட் ஜல்லிகற்கள் அனுமதியின்றி எடுத்து செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.