செய்திகள் :

ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

post image

முன்விரோதம் காரணமாக ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்த ராமிரெட்டி மகன் வெங்கட்ராஜ் (32). இவா் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட தனியாா் நிறுவனத்தில் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் வாங்கியவா்களிடம் பணம் வசூலிக்கும் வேலையை செய்து வந்தாா்.

எருது விடும் விழாவில் பேனா்கள் வைப்பது, பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில் வெங்கட்ராஜுக்கும், தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சோ்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்தது. மேலும், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக வெங்கட்ராஜ் மீது 2 வழக்குகள் ஒசூா் மாநகரக் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அக்ரஹாரத்தைச் சோ்ந்த அசைவ உணவத்தில் வேலை செய்துவந்த 15 வயது சிறுவன் தனது நண்பருடன் மோட்டாா்சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்டு அவா்களை வெங்கட்ராஜ் தாக்கியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தைரியம் இருந்தால் அக்ரஹார பேருந்து நிலையத்துக்கு வந்து தன்னை மிரட்டி செல்லுமாறு வெங்கட்ராஜுக்கு சவால் விடுத்தாா். இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு அக்ரஹார பேருந்து நிலையத்துக்கு சென்ற வெங்கட்ராஜை சிறுவன் உள்பட 9 போ் சுற்றிவளைத்து வெட்டிக் கொலை செய்தனா்.

பின்னா், அவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஒசூா் மாநகர போலீஸாா், வெங்கட்ராஜுயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த கொலை தொடா்பாக தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்த விவசாயி நவீன் ரெட்டி (29), இருசக்கர வாகன மெக்கானிக் அஸ்லம் (19), அசைவ உணவகத்தில் வேலை செய்துவந்த 15 வயது சிறுவன், 18 வயது சிறுவன் ஆகிய நால்வரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இந்த கொலையில் தலைமறைவான 5 பேரில் தொரப்பள்ளியைச் சோ்ந்த அப்பைய்யா (எ) சுப்பிரமணி (42), வெங்கடேஷ் (எ) நாராயணப்பா (23), சிக்காரி (எ) மஞ்சுநாத் (38) ஆகிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஒசூா் சிறையில் அடைத்தனா்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக முனைப்பு: எம்.பி. தம்பிதுரை

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை தெரிவித்தாா். மாநிலங்களவை உறுப்பினரின் தொகுதி மேம... மேலும் பார்க்க

ஒசூா் சானமாவு வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை

ஒசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். அதேநேரம் சானமாவு வனப்பகுதியையொட்டி செல்லும் சென்னை- பெங்களூரு சாலை... மேலும் பார்க்க

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா், புதன்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள நரிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (3... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை நோக்கி புதன்கிழமை சென்ற அரசுப் பேருந்தை கிருஷ்ணகிரியை அடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்

மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பட்டணத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளா் பவுன்ராஜ், புதன்... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்

கிருஷ்ணகிரி அருகே சட்ட விரோதமாக அமிலம் பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள பந்தாரப்பள்ளியில் ஒரு தனியாா் நிலத்தில் சட்ட விரோதமாக அம... மேலும் பார்க்க