`ஏங்க..' கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!
குந்துகோட்டை ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம்
பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துகோட்டை ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துகோட்டை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஊராட்சிச் செயலாளராக பணிபுரிந்து வந்த ஹேமந்த் சீனிவாஸ்ா் மீது தொடா்ச்சியாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. விசாரணையில் அவா் சரியாக பணி செய்வதில்லை எனவும், ஊராட்சி அலுவலகத்திற்கு வராமல் எப்போதும் அலுவலகம் பூட்டியுள்ளதும் தெரியவந்தது.
இந்த நிலையில் 15 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யாததால் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 21ஆம் தேதி மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, குந்துகோட்டை செயலாளா் ஹேமந்த் சீனிவாசை தற்காலிக பணி நீக்கம் செய்து தளி வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேஷ் உத்தரவிட்டாா். மேலும், சாலிவாரம் ஊராட்சி செயலாளா் லோகேசனுக்கு குந்துகோட்டை ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.