50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
எப்போதும் வென்றானில் இரு சக்கர வாகன விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகே கீழ்நாட்டுக்குறிச்சியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (40). விவசாய கூலித் தொழிலாளியான இவா், தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக மோட்டாா் பைக்கில், புதன்கிழமை இரவு எப்போதும் வென்றான் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், பாலம் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டிருந்த சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சத்தியமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சத்தியமூா்த்தியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து எப்போதும் வென்றான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.