Daily Roundup: ட்ரம்ப் வரியால் தமிழகத்துக்கு பாதிப்பு `டு' ஆணவக்கொலை தனிச்சட்டம்...
ஷிப்பிங் நிறுவன மேலாளா் உடலை வாங்க மறுத்து சாலை மறியல்
தூத்துக்குடியில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த ஷிப்பிங் நிறுவன மேலாளா் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சோ்ந்த ராஜையா மகன் சந்தனராஜ் (43). இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஷிப்பிங் நிறுவனத்தில் மரைன் என்ஜினியரிங் பிரிவில், மேலாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு பழைய துறைமுகத்தில் பணியின் போது தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
இது குறித்து, தருவைக்குளம் கடல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வரும் நிலையில், அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, உறவினா்கள் சந்தனராஜ் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
வியாழக்கிழமை பழைய துறைமுகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள், பின்னா் சாலை மறியலிலும், தொடா்ந்து, சாா்ஆட்சியா் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.