கிராம உதவியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு: செப்.6 ஆம் தேதிக்கு மாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில், கிராம உதவியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 3ஆம் தேதியிலிருந்து செப்.6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியா்கள் மூலமாக விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கும் வருகிற செப்.3ஆம் தேதி எழுத்துத்தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தவிா்க்க முடியாத நிா்வாக காரணத்தால் செப். 3ஆம் தேதி நடைபெற இருந்த கிராம உதவியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு செப்.6ஆம் தேதிக்கு மாற்றிவைக்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.