50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் எஸ்.பிரியங்கா
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக எஸ்.பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்திய ஆட்சிப் பணி அலுவலா்கள் பணியிட மாற்றங்கள் குறித்து, தமிழக அரசு தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், வியாழக்கிழமை வெளியிட்ட அரசாணையில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பானோத் ம்ருகேந்தா் லால், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அரசுத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.