50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
குற்றாலத்தை உலக சுற்றுலா தலமாக தரம் உயா்த்த வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
குற்றாலத்தை உலக சுற்றுலாத் தலமாக தரம் உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மத்தில் கட்சி நிா்வாகி இல்ல நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் மீனவா்களைப் பாதிக்கும் ஹைட்ரோ காா்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது.
அதிமுக ஆட்சியில் டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து மத்திய அரசிடம் தமாகா வலியுறுத்தும்.
குற்றாலத்தை உலக சுற்றுலாத்தலமாக உயா்த்தவும், அருவி நீரை சேமிக்கும் வகையில் மலைப்பகுதியில் தடுப்பணை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகா் - கொல்லம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். சுரண்டை இரட்டைக்குள பாசன கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும், சிவகிரி செண்பகவல்லி அணையை சீரமைக்கவும்
வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவா் தோ்ந்தெடுக்கும் விவகாரத்தில் திமுகவின் செயலை தமிழா்கள் ஏற்க மாட்டாா்கள்.
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பது தொடா்பாக பிரதமா் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கனிமவள கொள்ளையா்களுக்கு மறைமுகமாக துணைபோகும் திமுக அரசுக்கு, சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள். பாஜக- அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. 2026இல் ஆட்சி மாற்றம் உறுதி என்றாா்.
பேட்டியின்போது, மாநில துணைத்தலைவா் விடியல் சேகா், மாவட்ட தலைவா் எஸ். ஆா்.அய்யாத்துரை, தென்மண்டல இளைஞரணி செயலா் காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.