கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை: 2 போ் கைது
ஆலங்குளத்தில் கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததாக 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சிலா் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது 2 இளைஞா்கள் போலீஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனராம். அவா்களைத் துரத்திப் பிடித்து நடத்திய விசாரணையில், அவா்கள் ஆலங்குளம் அண்ணாநகா் மயிலேறி என்ற தங்கம் மகன் வைத்திலிங்கம் (34), பிள்ளையாா்கோயில் தெரு பன்னீா் மகன் வெற்றிராஜ் (26) என்பதும், கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 900 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.