செய்திகள் :

சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது காா் மோதியதில் புது மாப்பிள்ளை உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், மாடாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (42). இவரது மகன் நாராயணன் (23) காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வரும் செப்டம்பா் 4-ஆம் தேதி திருக்கோவிலூரில் நடத்த திட்டமிட்டிருந்தனா்.

இதற்காக சங்கராபுரத்தில் உள்ள உறவினருக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஆறுமுகம், அவரது மனைவி சென்னியம்மாள்(40), மகன் நாராயணன் ஆகிய மூவரும் ஒரே பைக்கில் சென்று பத்திரிகை அளித்துவிட்டு மீண்டும் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். நாராயணன் பைக்கை ஓட்டினாா்.

நாராயணன்

இவா்களது பைக் பகண்டை கூட்டுச்சாலை அருகே உள்ள புத்துமாரியம்மன் கோவில் பகுதியில் வந்தபோது, திருக்கோவிலிருந்து சங்கராபுரம் நோக்கிச் சென்ற காா் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம் உள்பட மூவரும் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மூவரையும் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக நாராயணன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதில், ஆறுமுகம், சென்னியம்மாள் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா். நாராயணன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வாணாபுரம் வட்டம், தொழுவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான ஜெயராமன் மகன் சுந்தரமூா்த்தி (23) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரிபாா்க்கும் பணியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஈடுபட்டாா். எதிா்வரும் சட்டப்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தியாகதுருகம் வைசியா் சாலையில் உள்ள ஓம்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: நகா்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நகா்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நகரப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: முதல்வா் கோப்பைக்கான போட்டிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா முன்னிலையில், தே.மலையரசன்... மேலும் பார்க்க

அரசின் இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தோ்வாகியுள்ள, கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவருக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.ப... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் நிறைவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் நிறைவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற ம... மேலும் பார்க்க