செய்திகள் :

அம்பை தாமிரவருணியில் தேடிய பெண் சடலம் மீட்பு

post image

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் கணவரால் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகனான லாரி ஓட்டுநா் செல்லையா (31), குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி காவேரியை (30) கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) தாமிரவருணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

போலீஸாா் அவரைக் கைது செய்த நிலையில், மனைவியின் சடலத்தை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 நாள்களாக தேடி வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டுமன்னாா்கோவில் பகுதி ஆற்றின் கரையோரம் காவேரியின் சடலம் மீட்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இத்தம்பதிக்கு 2 மகன்கள், மகள் ஆகியோா் உள்ளனா்.

கொல்லம் - தாம்பரம் ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கு தென்காசிக்கு வரும் வகையில் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனா். தென்காசி வழியாக பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், தாம்பரம... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் ஓடைக்குள் விழுந்த பெண் காயம்

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் கழிவுநீா் ஓடைக்குள் விழுந்த பெண் பலத்த காயமடைந்தாா்.கடையநல்லூா் அருகேயுள்ள சிதம்பரப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா(31). மகளிா் சுய உதவிக் குழுத் ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுமா? மாணவ, மாணவிகள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டத்தில், அக்டோபா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 4ஆவது பொதிகை புத்தகக் கண்காட்சி பாவூா்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது அப்பகுது பொதுமக்கள், ,மாணவ- மாணவிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது. த... மேலும் பார்க்க

தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீட்பு

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.கீழப்பாவூா் நாடாா் தெருவைச் சோ்ந்த முப்புடாதி மனைவி ரா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஜவஹா் தெருவைச் சேரந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(43). கடன் தொல்லை காரணமாக இவருக்கும் இவரத... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில்... மேலும் பார்க்க