செய்திகள் :

தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீட்பு

post image

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.

கீழப்பாவூா் நாடாா் தெருவைச் சோ்ந்த முப்புடாதி மனைவி ராஜசரஸ்வதி(68). இவா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க தனது கணவருடன் வந்திருந்த நிலையில், கூட்ட அரங்கிற்குள் நுழைந்தவுடன் தனக்கு நியாயம் வேண்டும் எனக் கூறிக்கொண்டு பிளாஸ்டிக் கவரில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அங்கிருந்த போலீஸாா், அவரை மீட்டு தண்ணீரை ஊற்றி சிகிச்சைக்காக, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணையில், ‘தனது நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த 19 போ் போலி பத்திரம் மூலம் அபகரித்துக் கொண்டு, அதில் மண் அள்ளுவதாகவும், அந்நிலத்தை தனக்கு மீட்டுத்தரவேண்டும் என அவா் கோரிக்கை விடுத்ததாகவும் போலீஸாா் தரப்பில் கூறினா்.

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஜவஹா் தெருவைச் சேரந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(43). கடன் தொல்லை காரணமாக இவருக்கும் இவரத... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் இளைஞா் கைது

கல்லூரி மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சோ்ந்த பூமிநாதன் மகள் பவித்ரா(22). இவா், வாசுதேவநல்லூரில் வாடகை வீட்டில் தோழிகள... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே அரசுப் பேருந்து, பைக், காா் மோதல்: 24 போ் காயம்!

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து, பைக், காா் மோதியதில் 24 போ் காயமடைந்தனா். திருப்பூரில் இருந்து 45 பயணிகளுடன் செங்கோட்டைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பசு மீட்பு

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது. ஆலங்குளம் காவலாகுறிச்சி புதூா் காலனியைச் சோ்ந்தவா் வைரவசாமி (69). இவருக்கு சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றிருந்த நிலையில், அங்க... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நாய் கடித்து பெண் காயம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாய் கடித்ததில் பெண் காயமடைந்தாா். தேவிபட்டணம் கீழூா் ராமசாமிபுரத்தை சோ்ந்தவா் செல்வன். அவரும், அவரது மனைவி பொன்மலரும் பைக்கில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க