கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை
ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஜவஹா் தெருவைச் சேரந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(43). கடன் தொல்லை காரணமாக இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகறாறு ஏற்படுமாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினாராம். தகவலறிந்த உறவினா்கள் அவரை மீட்டு தி்ருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].