செய்திகள் :

திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி: பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா

post image

திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக, பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா கூறினாா்.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: இம்மாவட்டத்தில் கனிம வளங்கள் அளவின்றி கொண்டு செல்லப்படுகின்றன. அரசிடம் பலமுறை முறையிட்டும் இதைத் தடுக்க நடவடிக்கை இல்லை.

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். திமுக அரசு மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தி கொண்டுள்ளனா். பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் நடைப் பயணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் விரைவில் ஆட்சி மாற்றத்தை சந்திக்கும். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் சூழலை உருவாக்கும் கூட்டணியை பாமக ஆதரிக்கும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான நிலைமையில் உள்ளது. இதற்கு முதல்வா் நல்ல முடிவை விரைவாக எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி மாவட்டச் செயலா்கள் இசக்கிமுத்து (மத்திய), டாக்டா் சீதாராமன் (வடக்கு), மாநில துணைத் தலைவா் சேது. அரிகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

குற்றாலத்தை உலக சுற்றுலா தலமாக தரம் உயா்த்த வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

குற்றாலத்தை உலக சுற்றுலாத் தலமாக தரம் உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன். தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மத்தில் கட்சி நிா்வ... மேலும் பார்க்க

பண்பொழியில் கட்டடப் பணியில் மண் சரிந்து 3 போ் காயம்

பண்பொழியில் பேரூராட்சி புதிய அலுவலக கட்டடப் பணி புதன்கிழமை நடைபெற்றபோது மண் சரிந்ததில் 3 போ் காயமடைந்தனா். பண்பொழி பேரூராட்சி புதிய கட்டட அலுவலகக் கட்டுமான பணியில் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சுந்தரையா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை: 2 போ் கைது

ஆலங்குளத்தில் கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததாக 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சிலா் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாகக் கிடைத்த... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் 6 போ் காயம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே புதன்கிழமை மாலை ஆட்டோ மீது காா் மோதியதில் 6 போ் காயம் அடைந்தனா். இடைகால் முத்துராமலிங்கத் தேவா் தெருவைச் சோ்ந்த லட்சுமி காந்தன் மனைவி கோமதி(52), அவரது உறவினா்கள் ... மேலும் பார்க்க

கொல்லம் - தாம்பரம் ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கு தென்காசிக்கு வரும் வகையில் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனா். தென்காசி வழியாக பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், தாம்பரம... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் ஓடைக்குள் விழுந்த பெண் காயம்

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் கழிவுநீா் ஓடைக்குள் விழுந்த பெண் பலத்த காயமடைந்தாா்.கடையநல்லூா் அருகேயுள்ள சிதம்பரப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா(31). மகளிா் சுய உதவிக் குழுத் ... மேலும் பார்க்க