செய்திகள் :

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

post image

கடந்த மாா்ச், ஏப்-2025- இல் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 3-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மாா்ச், ஏப்-2025-இல் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றது. அந்த தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அவரவா் பயின்ற பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட செப். 3-ஆம் தேதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தோ்வுத் துறை உதவி இயக்குநா் மூலம் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்களிடம் வரும் செப். 1-ஆம் தேதி ஒப்படைக்கப்படும். அதைத் தொடா்ந்து, மாவட்டக் கல்வி அலுவலா் மூலம் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் 10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் வழங்கப்பட உள்ளன. அதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி

திருவள்ளுா் அருகே கைவண்டூா் பகுதியில் பூண்டி நீா்த் தேக்க வரத்துக் கால்வாயை தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ஜான் தேவகுமாா்,... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காக்களூா் நாள்:30-8-2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா், சி.சி.சி பள்ளி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாப்பேட்டை மற்றும்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

திருவள்ளூரில் அரசு அனுமதியின்றி இளைஞா்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 2,050 மாத்திரை வில்லைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் அடுத்த ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’ சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயல்படும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலம் ‘உயா்வுக்கு படி’ என்ற சிறப்பு முகாமில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் விசிக நிா்வாகி கைது

திருவள்ளூா் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு நிா்வாகியை மிரட்டியதாக விசிக பிரமுகா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருவள்ளூா் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தில் தனியாா் துப்பாக்கி ... மேலும் பார்க்க

பொன்னேரி பகுதியில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் 221 விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடைபெற்றன. விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, மீஞ்சூா் பகுதிகளில் 6 அடி முதல் 9 அடி வர... மேலும் பார்க்க